ஜூலை 29ல் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாக உள்ளது. மொத்தமாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரே காலத்தில் தராமல், படிப்படியாக, அதன் சோதனை வாடிக்கையாளர்களிடம் தொடங்கி, அடுத்தடுத்து, இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட உள்ளது. நீங்கள் ஏற்கனவே இன்சைடர் புரோகிராமில் உறுப்பினராக இருந்தாலும், விண்டோஸ் 10 சிஸ்டம் பெறுவதற்கு, முன்பதிவினைச் செய்திருந்தாலும், சில முன்னேற்பாடுகளை மேற்கொண்டு தயாராகவும். அவற்றை இங்கு பார்க்கலாம்.


மைக்ரோசாப்ட் அக்கவுண்ட்:

விண் 10னைப் பெறத் தயாராகும் முன், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மெயில் அக்கவுண்ட் ஒன்றை நீங்கள் பெற்றிருக்க வேண்டும். உங்களிடம் அவுட்லுக் டாட் காம், ஹாட் மெயில், எக்ஸ்பாக்ஸ் அல்லது லைவ் ஐ.டி. என எதனைக் கொண்டிருந்தாலும், அது மைக்ரோசாப்ட் அக்கவுண்ட்தான். உங்களிடம் இவை இல்லை என்றால், உடனே ஒன்றைப் பெற்றுக் கொள்ளவும்.  மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் ஒரு கட்டாயத் தேவை இல்லை என்றாலும், செட்டிங்ஸ் அமைப்பில் ஒருங்கிணைப்பு செய்வதற்கு அது தேவையாக இருக்கலாம். டேட்டா பேக் அப் செய்வதற்கும்,க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் சில வசதிகளைப் பெறுவதற்கும் எளிதாக இருக்கலாம்.

அதற்கு நீங்கள் செல்ல வேண்டியஇணையதள முகவரி:  CLICK HERE




உங்கள் பதிப்பை முன்பதிவு செய்திடுக:

 கூடிய விரைவில், உங்களுக்கான விண்டோஸ் 10 பதிப்பினை நீங்கள் பெற விரும்பினால், உங்களுடைய கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதற்கான தகுதியைக் கொண்டிருந்தால், இப்போதே, அதற்கான முன்பதிவினை மேற்கொள்ளவும். 



எந்த பதிப்பு உங்களுக்கானது?:

 உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கேற்ற வகையில், விண் 10 வகை கிடைக்கும். ஆனால், அதைக் காட்டிலும் உயர்நிலைப் பதிப்பு வேண்டுமென்றால், கட்டணம் செலுத்திப் பெற வேண்டியதிருக்கும். அனைத்து பதிப்புகளிலும் அடிப்படை வசதிகள் ஒரே மாதிரியாகவே தரப்பட்டுள்ளன. அவை: Cortana, Hello, Edge, Continuum, and Multi-doing. மற்ற பிசினஸ் பதிப்பு (ப்ரோ, எண்டர்பிரைஸ்) களிலும், கல்விப் பிரிவிற்கான பதிப்புகளிலும் உள்ள வசதிகளை, ஹோம் பதிப்பு பயன்படுத்துபவர்கள் விரும்ப மாட்டார்கள்.



உங்கள் ஹார்ட்வேர் அமைப்பை உறுதி செய்க: 

உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 / 8/ 8.1 இயங்கிக் கொண்டிருந்தாலும், கீழ்க்காணும் குறைந்த பட்ச ஹார்ட்வேர் தகுதிகளை, கம்ப்யூட்டர் கொண்டிருப்பதனை உறுதி செய்திடுக.

1 கிகா ஹெர்ட்ஸ் அல்லது கூடுதல் வேகத்தில் இயங்கும் ப்ராசசர்.

1 கிகா பைட் (32 பிட்) / 2 கிகா பைட் (64 பிட்) ராம் மெமரி.

32 பிட் ஓ.எஸ்.என்றால், குறைந்தது 16 ஜி.பி. ஹார்ட் டிஸ்க்கில் காலியாக இருக்க வேண்டும். அதுவே, 64 பிட் எனில், 20 ஜி.பி. இடம் வேண்டும். DirectX 9 or later with WDDM 1.0 driver கொண்டதாக உங்கள் கிராபிக்ஸ் கார்ட் இருக்க வேண்டும். 

திரை டிஸ்பிளே 800×600 பிக்ஸெல் திறன் கொண்டிருக்க வேண்டும். DirectX 9 அல்லது அதற்குப் பின் வந்தவற்றை உங்கள் கிராபிக்ஸ் கார்ட் திறனாகக் கொண்டிருக்கவில்லை என்றால், விண்டோஸ் 10 உங்கள் கம்ப்யூட்டரில் இயங்காது.



விண்டோஸ் அப்டேட் செய்திடுக:

விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்திடும் முன்னர், உங்களுடைய அப்போதைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்கிரேட் செய்திடுக. முழுமையாக பேட்ச் பைல்களை அப்டேட் செய்திடவும். இதற்கு எளிதான வழி Windows Update இயக்குவதுதான். இதனை இயக்கினால், அது தானாகவே, அனைத்தையும் அப்டேட் செய்து, விண்டோஸ் 10 பெறுவதற்கான ஐகானையும் உங்கள் கம்ப்யூட்டரின் டாஸ்க் பாரில் வலது மூலையில் தந்திடும்.




சாப்ட்வேர் அனைத்தும் அப்டேட் செய்திடவும். 


கம்ப்யூட்டரில் உள்ள தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தையும், அவற்றின் இணைய தளம் சென்று, அப்டேட் செய்திடவும். அனைத்து நிறுவனங்களுக்கும், அவர்களின் சாப்ட்வேர் தொகுப்புகளை வடிவமைத்திடுவதற்காக, மைக்ரோசாப்ட் விண் 10 சிஸ்டத்தினைக் கொடுத்தது. ஆனால், பல நிறுவனங்கள், இன்னும் அப்டேட் செய்ததாகத் தெரியவில்லை. எனவே, அந்த குறிப்பிட்ட சாப்ட்வேர் நிறுவனத்தின் தளம் சென்று, இதற்கான முயற்சிகளில் இறங்கவும். குறிப்பாக, சில சாப்ட்வேர் தொகுப்புகள், உங்களின் அன்றாட பணிகளுக்குத் தேவையாக இருக்கும். அவை இயங்காவிட்டால், பணியே மேற்கொள்ள இயலாது. அப்படிப்பட்டவற்றை கட்டாயம் அப்டேட் செய்திடவும். அந்நிறுவனம் அப்டேட் செய்திடவில்லை என்றால், பழைய பதிப்பு, விண் 10ல் இயங்குமா என்பதனை உறுதி செய்து கொள்ளவும். அதன் பின்னரும் இல்லை என்றால், விண் 10 பக்கம் அப்போதைக்குச் செல்லாமல் இருப்பது நல்லது.



துணை சாதனங்கள் சோதனை: 


நம் கம்ப்யூட்டருடன், பிரிண்டர், ஸ்கேனர், மோடம், இணைய கேமரா, நெட்வொர்க் கார்ட், வீடியோ கார்ட் போன்றவற்றைப் பயன்படுத்துவோம். இவை அனைத்தும் விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் இயங்குமா எனக் கண்டறியவும். அதற்கான ட்ரைவர் பைல்கள், அவற்றின் இணைய தளத்தில் உள்ளனவா என்று பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.



டேட்டா பேக் அப்: 


விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்து கொள்வது என்பது நாம் நம்மைச் சிறந்த முறையில் பாதுகாப்பாக வைக்கின்ற வழியாகும். இருப்பினும், இது ஒரு அப்கிரேட் தான். எனவே, உங்களுடைய மிக முக்கியமான டேட்டாவினைப் பாதுகாப்பாக நகல் ஒன்று எடுத்து வைக்கவும்.



தேவையான இடம்: 


கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் தேவையான இடம் இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். இல்லை என்றால், அதனை உருவாக்கவும். அப்கிரேட் செய்வதற்கு முன்னர், அதற்கான பைல்களைத் தரவிறக்கம் செய்திட 3 ஜி.பி. இடம் தேவைப்படும். டேப்ளட் பி.சி.க்களில் இது பிரச்னையாக இருக்கலாம். எனவே, காலி இடத்தை முதலில் உறுதி செய்திடுங்கள்.




உங்களுடைய சாப்ட்வேர் தொகுப்பை அறிந்து கொள்க: 

விண்டோஸ் 10, இன்ஸ்டால் செய்யப்படும் முன், உங்களுடைய செக்யூரிட்டி அல்லது ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பினை செயல் இழக்கச் செய்திடும். விண்டோஸ் 10 அப்போது, நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் முதலானவற்றை ஒரு நகலாகத் தன்னிடம் வைத்துக் கொள்ளும். அது விண் 10 உடன் இணைந்து செயலாற்றும் என்றால், அதனை மீண்டும் இன்ஸ்டால் செய்திடும். இல்லை எனில், அதன் Defender செயலியை இன்ஸ்டால் செய்திடும். 

உங்களிடம் விண்டோஸ் 7./8./8.1 இருப்பின், விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்யப்படுகையில், விண்டோஸ் மீடியா சென்டர் நீக்கப்படும். 

டிவிடிக்களை இயக்கிப் பார்க்க, தனியே ஒரு தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் தேவைப்படும்.

விண்டோஸ் 7 டெஸ்க்டாப் இயக்க செயலிகள் அனைத்தும் நீக்கப்படும்.

விண்டோஸ் 10 ஹோம் இன்ஸ்டால் செய்யப்பட்டால், விண்டோஸ் அப்டேட் பைல்கள் தாமாகவே உங்களுக்குக் கிடைக்கும்.

விண்டோஸ் 7 உடன் தரப்பட்ட சாலிடேர், மைன்ஸ்வீப்பர், ஹார்ட்ஸ் கேம்ஸ் ஆகியவை நீக்கப்படும். இவற்றின் இடத்தில், மைக்ரோசாப்ட் “Microsoft Solitaire Collection” and “Microsoft Minesweeper” ஆகியவற்றை மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.

உங்களிடம் யு.எஸ்.பி. ப்ளாப்பி ட்ரைவ் இருந்தால், விண்டோஸ் அப்டேட் தளத்திலிருந்து அதற்கான ட்ரைவர் பைல்களை காப்பி செய்து இயக்கிக் கொள்ள வேண்டும். 

விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்யப்படுகையில், கம்ப்யூட்டரில் உள்ள செயலிகள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு, விண் 10 உடன் இணைந்து இயங்காத செயலிகள் அனைத்தும் நீக்கப்படும். 

எனவே, இன்ஸ்டலேஷன் செயல்முறையின் போது, கிடைக்கும் டயலாக் பாக்ஸ்களைக் கூர்ந்து கவனித்துப் படிக்கவும். படிக்காமல் Next கிளிக் செய்திட வேண்டாம். .எனவே, உங்கள் சிஸ்டத்தினை அப்டேட் செய்து, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கான முன்பதிவினை மேற்கொண்டு வைத்திடவும். விரைவில் உங்களுக்கான விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்திடும் வாய்ப்பு கிடைக்கும்.

Post a Comment Blogger

  1. Thanks for very use tips in Tamil. very great Tutorial. u r really best in Tamil Nadu.

    ReplyDelete

 
Top