
மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மைக்ரோசாஃப்டின் கடைசி பதிப்பான விண்டோஸ் 10 இன்று வெளியிடப்பட்டது. லேப் டாப், டெஸ்க்டாப், 'டேப்லட்' கணினி பயனர்கள், விண்டோஸ் 10 பதிப்பை இலவசமாக அப்கிரேட் (upgrade) செய்துக் கொள்ளலாம். மொபைல்களுக்கான பதிப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த பதிப்பில் பல்வேறு புதிய அம்சங்கள் இருந்தாலும், சில வரம்புகளும் (limitations ) உள்ளதாக ’தி வேர்ஜ்’ என்னும் ஆய்வு நிறுவனம் முன்னர் தெரிவித்திருந்தது. எனவே விண்டோஸ் பயனர்கள் புதிய பதிப்பிற்க்கு அப்கிரேட் செய்வதற்க்கு முன்னர் அதன் குறைப்பாடுகளை பற்றி தெரிந்துக் கொள்வது அவசியம்.
விண்டோஸ் 10 பதிப்புக்கு அப்கிரேட் செய்யும் போது ஏற்கெனவே உள்ள சில சாஃப்ட்வேர்ஸை, பயனர்கள் இழந்து விட வாய்ப்பு இருக்கிறது.
மேலும் சில குறைப்பாடுகள்,
1. விண்டோஸ் மீடியா சென்டர் (Windows Media Center) நீக்கப்படும்.
2. ஹார்ட்ஸ் சீட்டு விளையாட்டு (The card game Hearts) நீக்கப்படும்.
3. விண்டோஸ் 7 டெஸ்க்டாப் கேஜெட்டுகள் (Windows 7's desktop gadgets) நீக்கப்படும்.
4. ஃப்ளாப்பி டிஸ்க் பயன்படுத்துவோர் விண்டோஸ் 10 க்கு அப்கிரேட் செய்யும் போது புதிய இயக்கிகளை (Drivers) இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.
5. டிவிடிகள் பார்ப்பதற்கு "தனி பின்னணி மென்பொருள்" (separate playback software) தேவைப்படும்.
விண்டோஸ் 10 பல சிறப்பம்சங்களை கொண்டு இருந்தாலும், ஒரு சில குறைப்பாடுகள் உள்ளது விண்டோஸ் பயனர்களிடையே சிறிய ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பிருப்பதாக மென்பொருள் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எனவே விண்டோஸ் 10 பதிப்பை பெறுவதற்கு முன்னர் கணிணியில் உள்ள அனைத்து மென்ப்பொருள்களையும் வேறு கருவியில் சேமித்து வைத்துக் கொள்வது அவசியம்.
Post a Comment Blogger Facebook
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.