இணைய சேவையில் இயங்கும் ஒவ்வொரு நிறுவனமும், தன் பயனாளர்களுக்கு, க்ளவ்ட் சேவையின் மூலம் அவர்களின் பைல்களைத் தேக்கி வைக்க இடம் அளித்து வருகிறது. அவ்வப்போது, தேக்கும் இடத்தின் அளவினை அதிகரிப்பதன் மூலமும், வேறு சில கூடுதல் வசதிகளைத் தருவதன் மூலமும், தங்கள் வாடிக்கையாளர்களைத் தங்களிடமே தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்கின்றன.
புதிய பயனாளர்களைக் கவரவும் இந்த வழிகளைப் பயன்படுத்துகின்றன. எனவே, தற்போது கிடைக்கும் க்ளவ்ட் சேவைகளில், எந்த நிறுவனத்தின் க்ளவ்ட் சேவை சிறந்தது? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையையும், க்ளவ்ட் சேவை நிலைகளையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
“எனக்கு எது சிறந்த க்ளவ்ட் சேவை?” என்ற கேள்விக்கான பதில் உங்களிடம் தான் உள்ளது. உங்களுக்கு பைல்களைத் தேக்கி வைக்க எவ்வளவு இடம் தேவை மற்றும் எந்த அளவில் பாதுகாக்கப்பட வேண்டிய பைல்களுக்கு இடத்தைத் தேடுகிறீர்கள் என்பவற்றைப் பொறுத்தே இதற்கான பதில் கிடைக்கும். நிதி பரிமாற்றம், மக்கள் நலத்துறை சார்ந்த பிரிவுகள் ஆகியவற்றில் நீங்கள் செயல்படுபவராக இருந்தால், உயர்ந்த பாதுகாப்பான நிலையில் தேக்குவதற்கான இடம் அளிக்கும், கட்டண சேவையே உங்களுக்கு உகந்தது.
நீங்கள் ஒரு நுகர்வோராக இருந்து, அல்லது ரகசிய தகவல்களைக் கையாளாத, ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுபவராக இருந்தால், உங்களைப் பொறுத்தவரை எளிமையாகக் கையாளக் கூடிய வசதி, குறைந்த கட்டணம், அதிக தேக்ககத்திற்கான இடம் ஆகியவை பாதுகாப்பினைக் காட்டிலும் முன்னிலை தர வேண்டிய விஷயங்களாக இருக்கும். இருப்பினும், க்ளவ்ட் ஸ்டோரேஜ் என்று வருகையில், நம் பைல்கள் சுருக்கப்பட்டு தேக்கப்படுவதும், இடத்தின் அளவுமே முக்கியமான அம்சங்களாகக் கருதப்படுகின்றன. இந்த வகையில், தனிப்பட்ட நபர் பயன்பாட்டிற்கும், வர்த்தக நிறுவனப் பயன்பாட்டிற்குமான க்ளவ்ட் ஸ்டோரேஜ் குறித்து இங்கு பார்க்கலாம். தற்போது நமக்குக் கிடைக்கும் ஐந்து க்ளவ்ட் ஸ்டோரேஜ் வசதிகளை இங்கு ஒப்பிட்டுக் காணலாம்.
ட்ராப் பாக்ஸ், ஒன் ட்ரைவ் மற்றும் கூகுள் ட்ரைவ்அதிக வசதிகளைக் கொண்டவையாக இந்த மூன்றும் இயங்குகின்றன. தனிப்பட்ட நுகர்வோர் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தீர்வுகளை அளிக்கின்றன. வசதிகளை அளிப்பதுடன், கட்டண விகிதங்களும் பயனாளர்கள் எளிதாகத் தேர்ந்தெடுக்கும் வகையில் உள்ளன. பாதுகாப்பு வகையில், இந்த மூன்றும் ஒரு குறையைக் கொண்டுள்ளன. பைல்களை இணையத்திற்குக் கொண்டு செல்கையில், இங்கு அவற்றைப் பாதுகாப்பாகச் சுருக்குவது இல்லை. ஆனால், தேக்கி வைக்கப்படும் இடத்திற்குச் சென்றவுடன், சுருக்கப்பட்டே பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. இந்த பாதுகாப்பு தன்மை, தனிப்பட்ட நுகர்வோர் மற்றும் சில நிறுவனங்களுக்கு பெரிய இழப்பினைத் தரப்போவதில்லை. ஒரு சில நிறுவனங்கள் கையாளும் பைல்களின் தன்மையைப் பொறுத்து, வடிவமைக்கப்படும் அமைப்பினைப் பொறுத்து, தொடக்கத்திலேயே அவை சுருக்கப்படுவது தேவைப்படலாம். எனவே, அத்தகைய நிறுவனங்கள், இந்த சேவையைப் பெறாமல் போகலாம்.
ட்ராப் பாக்ஸ்:
மற்ற ஸ்டோரேஜ் வசதிகளைக் காட்டிலும், ட்ராப் பாக்ஸ் பலவகை சாதனங்களுக்கு சப்போர்ட் செய்திடுகிறது. லினக்ஸ், விண்டோஸ் போன், பிளாக் பெரி போன்றவற்றில் உருவாக்கப்படும் பைல்களையும் இதில் தேக்கி வைக்கலாம். ஆனால், இது அளிக்கும் இடம் மிகவும் கஞ்சத்தனமாக, 2 ஜி.பி. அளவே உள்ளது. நீங்கள் முயன்றால், கூடுதல் இடம் இலவசமாகப் பெறலாம். உங்கள் நண்பர்களுக்கு, நீங்கள் ட்ராப் பாக்ஸ் பரிந்துரைத்தால், அதற்கேற்றபடி, தேக்கும் இடம் அதிகரிக்கும். மேலும் உங்கள் மொபைல் போனில், தானாக கேமரா அப்லோட் வசதியை செட் செய்தாலும், ட்ராப் பாக்ஸை உங்கள் சமூக தளப் பக்கங்களில் தொடர்பு படுத்தினாலும், ட்ராப் பாக்ஸ் கூடுதல் இடத்தினை வழங்குகிறது.
ட்ராப் பாக்ஸ் ப்ரோ (Dropbox Pro):
இந்த வசதி, மாதந்தோறும் 9.99 டாலர் செலுத்தினால் கிடைக்கிறது. அல்லது ஆண்டுக்கு 99 டாலர் செலுத்தி கூடுதல் இடம் பெறலாம். ஒரு டெரா பைட் இடம் தரப்படுகிறது. வர்த்தக நிறுவனங்களுக்கு, ஒன்றுக்கு ஆண்டுக்கு 150 டாலர் கட்டணத்தில் ஒரு டெரா பைட் இடம் தரப்படுகிறது.
ஒன் ட்ரைவ்மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒன் ட்ரைவ் க்ளவ்ட் சேவை, இலவசமாக 15 ஜி.பி. இடம் ஒருவருக்கு தருகிறது. மற்றவர்களுக்கு இதனைப் பரிந்துரை செய்வதன் மூலம், மேலும் 5 ஜி.பி. இடம் பெறலாம். நீங்கள் Office 365 பயனாளராக இருந்தால், 1 டெரா பைட் இடம் இலவசமாகக் கிடைக்கும். இதில் தேக்கப்படும் பைல்களை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கையில், பார்க்க மட்டும், அல்லது எடிட் செய்வதற்கும் என பல நிபந்தனைகளுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த வசதிகள் ட்ராப் பாக்ஸ் ப்ரோ கட்டணம் செலுத்தி வாங்கினால் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், ஒன் ட்ரைவில் இது இலவசம். கூடுதலாக, 100 ஜி.பி. 200 ஜி.பி. மற்றும் ஒரு டெரா பைட் இடம் வேண்டும் என்றால், மாதந்தோறும் முறையே 1.99 டாலர், 2.99 டாலர் மற்றும் 6.99 டாலர் செலுத்திப் பெறலாம். ஆனால், மைக்ரோசாப்ட் ஒரு நிபந்தனை விதிக்கிறது. அதன் பார்வையில் சரியற்ற கோப்புகளை அழித்துவிடும் உரிமையை மைக்ரோசாப்ட் கொண்டுள்ளது.
ஒன் ட்ரைவ்மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒன் ட்ரைவ் க்ளவ்ட் சேவை, இலவசமாக 15 ஜி.பி. இடம் ஒருவருக்கு தருகிறது. மற்றவர்களுக்கு இதனைப் பரிந்துரை செய்வதன் மூலம், மேலும் 5 ஜி.பி. இடம் பெறலாம். நீங்கள் Office 365 பயனாளராக இருந்தால், 1 டெரா பைட் இடம் இலவசமாகக் கிடைக்கும். இதில் தேக்கப்படும் பைல்களை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கையில், பார்க்க மட்டும், அல்லது எடிட் செய்வதற்கும் என பல நிபந்தனைகளுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த வசதிகள் ட்ராப் பாக்ஸ் ப்ரோ கட்டணம் செலுத்தி வாங்கினால் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், ஒன் ட்ரைவில் இது இலவசம். கூடுதலாக, 100 ஜி.பி. 200 ஜி.பி. மற்றும் ஒரு டெரா பைட் இடம் வேண்டும் என்றால், மாதந்தோறும் முறையே 1.99 டாலர், 2.99 டாலர் மற்றும் 6.99 டாலர் செலுத்திப் பெறலாம். ஆனால், மைக்ரோசாப்ட் ஒரு நிபந்தனை விதிக்கிறது. அதன் பார்வையில் சரியற்ற கோப்புகளை அழித்துவிடும் உரிமையை மைக்ரோசாப்ட் கொண்டுள்ளது.
கூகுள் ட்ரைவ் :
ஜி மெயில், கூகுள் அப்ளிகேஷன்ஸ், கூகுள் போட்டோஸ் எனத் தன் அனைத்து சேவைகளுக்காக என 15 ஜி.பி. இலவச இடத்தினை கூகுள் ட்ரைவ் அளிக்கிறது. உங்களிடம் ஏற்கனவே கூகுள் அக்கவுண்ட் ஒன்று இருந்தால், உங்களுக்கு கூகுள் ட்ரைவ் வசதி உள்ளது; அதனை நீங்கள் அனுபவித்துக் கொண்டுள்ளீர்கள் என்று பொருள். இங்கு தேக்கப்படும் பைல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கையில், அதற்கான நிபந்தனைகளை எந்தவிதக் கட்டணமும் செலுத்தாமல் அமைக்க கூகுள் ட்ரைவ் உதவுகிறது. ஆனால், ட்ராப் பாக்ஸ் 256 பிட் என்கிரிப்ஷன் வசதி தருகையில், இது 128 பிட் என்கிரிப்ஷன் வசதி மட்டுமே தருகிறது.
ஸ்பைடர் ஓக் மற்றும் ட்ரெசோரிட் (SpiderOak and Tresorit):
இந்த இரண்டு க்ளவ்ட் சேவை வசதிகளும், நாம் என்ன வகையான பைல்களைத் தேக்குகிறோம் என்று கண்டு கொள்வதே இல்லை. ஏனென்றால், நம் கம்ப்யூட்டரை விட்டு பைல்கள் செல்லும்போதே, அது சுருக்கப்பட்டுவிடுகிறது. இவை இரண்டும், பைல் பகிர்தல் மற்றும் பாதுகாப்பு குறித்த வசதிகளை வெவ்வேறு வகைகளில் அளிக்கின்றன.
ஸ்பைடர் ஓக் :
நீங்கள் தேக்கும் பைல்களைப் பகிர்ந்து கொள்கையில், ஸ்பைடர் ஓக், இந்த பைல்களை உருவாக்கிய உங்களுக்கும், யாருக்கெல்லாம் பகிர்ந்து கொள்ள அனுமதி அளிக்கிறீர்களோ அவர்களுக்கும், ஒரு “தனி அறை” தருகிறது. இந்த “அறை” பாஸ்வேர்டினால், பாதுகாக்கப்படுகிறது. இதனை இணையதள லிங்க், பைல் லிங்க் அல்லது மின் அஞ்சல் அழைப்பு மூலமாக மட்டுமே அணுக முடியும். இங்கு கிடைக்கும் Hive என்னும் வசதி மூலம் உங்கள் சாதனங்கள் அனைத்திலும் உள்ள பைல்களை ஒருங்கிணைக்க முடியும். ஆனால், அதற்கு உங்கள் சாதனத்திலிருந்து பைல்களை நீங்கள் இழுத்து வந்து இந்த Hiveல் அமைக்க வேண்டும். இது இலவசமாக 2 ஜி.பி. இடம் அளிக்கிறது. கட்டணம் செலுத்தி 30 ஜி.பி. ஒரு டெரா படி, 5 டெரா பைட் இடத்தினைப் பெறலாம். இதற்கான கட்டணம் முறையே, மாதம் ஒன்றுக்கு டாலர் 7, 12 மற்றும் 25 ஆகும்.
ட்ரெசோரிட்:
இந்த க்ளவ்ட் சேவை, குழுக்களை அதாவது tresor களை அமைக்க அனுமதிக்கிறது. இந்த குழுக்களுக்கு, நீங்கள் உங்கள் நண்பர்களை அழைக்கலாம். உங்கள் நண்பர்களுடன் இந்த குழுவில் பைல்களைத் தேக்கிப் பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு குழு உறுப்பினருக்கும், குழுவினை அணுக அனுமதி தனித்தனியே தரப்படுகிறது. தன் தேக்கும் இடத்தினை, அனுமதியின்றி உடைக்கும் ஹேக்கர்களுக்கு, 50 ஆயிரம் டாலர் அளிப்பதாக, இந்நிறுவனம் சவால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை எந்த ஹேக்கரும் இந்த முயற்சியில் வெற்றி பெறவில்லை. மாதந்தோறும் 12.5 டாலர் செலுத்தினால், சுருக்கப்பட்ட இடமாக 100 ஜி.பி. கிடைக்கிறது. வர்த்தக நிறுவனங்களுக்குக் கூடுதல் பாதுகாப்புடன், கூடுதல் வசதிகளுடன், அதிகக் கட்டணத்தில் இடம் அளிக்கிறது.
இந்த ஆண்டில், இதுவரை நாம் அறிந்த வரையில் கிடைக்கின்ற க்ளவ்ட் ஸ்டோரேஜ் வசதிகள் மேலே தரப்பட்டுள்ளன. நீங்கள் எதிர்பார்க்கும் வசதி, உங்கள் பட்ஜெட் மற்றும் பாதுகாப்பின் அடிப்படையில், நீங்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த ஆண்டில், இதுவரை நாம் அறிந்த வரையில் கிடைக்கின்ற க்ளவ்ட் ஸ்டோரேஜ் வசதிகள் மேலே தரப்பட்டுள்ளன. நீங்கள் எதிர்பார்க்கும் வசதி, உங்கள் பட்ஜெட் மற்றும் பாதுகாப்பின் அடிப்படையில், நீங்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
Post a Comment Blogger Facebook