gboN6Df.png?1

தன் வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய தனி நபர் தகவல்களைக் காத்துக் கொள்ள அதிகப்படியான டூல்களைத் தரும் முயற்சியில் கூகுள் இறங்கியுள்ளது. முதல் கட்டமாக, அதன் பாதுகாப்பு சாதனங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. புதியதாக 'மை அக்கவுண்ட்' (My Account) என்ற பெயரில், ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வளையம் சென்று, பயனாளர்கள் தங்கள் தனி நபர் டேட்டா தொடர்பான அமைப்புகளைப் பார்வையிட்டு, அவற்றில் மேலும் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம். 

'மை அக்கவுண்ட்' பக்கமானது ஒருவருடைய கூகுள் அக்கவுண்ட்டினைக் கட்டுப்படுத்த, பாதுகாக்க மற்றும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் பக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பயனாளர்கள் பல வேலைகளை மேற்கொள்ளலாம். உங்கள் பாஸ்வேர்டை நிர்வகிக்கலாம். அக்கவுண்ட் ஹிஸ்டரியைப் பார்வையிடலாம். உங்கள் தனி நபர் தகவல்களை மாற்றலாம். உங்களை இலக்காகக் கொண்டு தரப்படும் விளம்பரங்களைக் கட்டுப்படுத்தலாம். இந்த வளையத்தில், நம்முடைய தனி நபர் தகவல்கள் எப்படி பாதுகாக்கப்படுகின்றன என்று அதற்கான டூல்களைச் சோதனையிடலாம்.

தங்களுடைய தகவல் தேடல், மேப்பில் தேடல், யு ட்யூப் தேடிப் பயன்படுத்துதல் மற்றும் பிற கூகுள் பயன்பாட்டுத் தளங்களில் மேற்கொள்ளும் பணிகள் சார்ந்த தகவல்களை இங்கு நாம் நிர்வகிக்கலாம். ஒருவரது அக்கவுண்ட்டில் இணைக்கப்பட்டுள்ள அப்ளிகேஷன்களையும், இணைய தளங்களையும் பயனாளர்களே கட்டுப்படுத்தலாம். 



UQ4HbSf.png?1

இந்த “மை அக்கவுண்ட்” பாதுகாப்பு வளையம் தவிர, கூகுள் privacy.google.com என்னும் தளத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தளத்தில் பாதுகாப்பு குறித்த பொதுவான கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்கின்றன. “கூகுள் நம்மிடமிருந்து எந்த வகையான தகவல்களைத் திரட்டுகிறது? அந்த தகவல்களை வைத்துக் கொண்டு கூகுள் என்ன செய்கிறது? கூகுள் பயன்பாட்டில் எனக்கு ஏற்படும் அனுபவத்தினைக் கட்டுப்படுத்த எனக்கு என்ன டூல்கள் இருக்கின்றன? போன்ற கேள்விகளுக்கு இங்கு விடைகள் தரப்படுகின்றன.

இதே தளத்தில், கூகுள் எப்படி நம் தொடர்பான விளம்பரங்களை நமக்குக் காட்டுகிறது. அப்போது நம்மைப் பற்றிய தகவல்களை எவ்வாறு விளம்பர நிறுவனங்களிடம் காட்டமலேயே, விளம்பரங்கள் நம்மை வந்தடைகின்றன என்றெல்லாம் விளக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இது போன்ற தனி நபர் டேட்டா பாதுகாப்பு குறித்து நம்மிடமே கட்டுப்பாட்டினைத் தரும் டூல்கள் பல தயாரிப்பில் இருப்பதாகவும், தொடர்ந்து அவை தரப்படும் எனவும் கூகுள் அறிவித்துள்ளது. 

Post a Comment Blogger

 
Top