கண்ணாடியில் திரைப்படம்
கூகுள் கண்ணாடி மூலம் உலகை கண்ணருகில் கொண்டுவந்துவிடலாம் என்பது ஒருபக்கம். இன்னொருபக்கம் ஒரு ஹெட்போனை மாட்டிக்கொண்டு இசையை ரசிப்பது மட்டுமல்ல, இனி படங்களையும் பார்த்துவிடலாம். கண்ணையும் மறைப்பதுபோல உள்ள இந்த ஹெட்செட்டில் திரைப்படத்தைப் பார்ப்பதற்கான திரை ஒன்று உள்ளது. கண்ணுக்கருகில் வைத்து பார்ப்பதால் ரெட்டினாவை பாதிக்காத வண்ணம் இந்த திரை தயாரிக்கப்பட்டிருக்கிறது. கம்ப்யூட்டர், தொலைக்காட்சி பெட்டி போன்றவற்றை நேரடியாக பார்ப்பதைவிட இணைப்பு கொடுத்து பார்க்கலாம். அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் கண்டு ரசிக்க இந்த கருவி பயன்படும்.
ஹோண்டாவின் ரைடர்
ஒருவர் மட்டுமே உட்கார்ந்து பயணிக்கக்கூடிய ரைடரை விரைவில் கொண்டுவர உள்ளது ஹோண்டா. அலுவலகத்தில் அடிக்கடி நடந்து நடந்து அலுத்து போனவர்கள், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அடிக்கடி செல்ல வேண்டியிருப்பவர்களுக்கு இந்த வாகனம் உதவும்.
எதிர்கால சமையலறை
நவீன வீடுகளில் சமையலறை என்று தனியாக அறை ஒதுக்காமல் டைனிங் டேபிளுக்கு பக்கமாக கொஞ்சம் இடத்தை மட்டும் ஒதுக்கி இருப்பார்கள். இதற்கு ஏற்ப நவீன சமையல் சாதனங்கள் இருக்கும். ஆனால் வேர்ல்ஃபூல் நிறுவனம் எதிர்கால சமையலறையை வடிவமைத்துள்ளது. சமைப்பதற்கு என்று தனியாக இடத்தை ஒதுக்கத் தேவையில்லை. நாம் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்திலேயே சமைத்துக் கொள்லலாம். சமையல் மேடையோ, தனியாக இடமோ தேவையில்லை. சாப்பிடும் மேசையிலேயே சமைத்துக் கொள்ளலாம்.
சுற்றுலா செல்லும்போது வீட்டுச் சாப்பாடு வேண்டும் என்று அடுப்பை தூக்கிச் சுமக்க தேவையில்லை. பாத்திரத்தை வைப்பதற்கு ஏற்ற சமதளம் போதும். முழுக்கவும் ஸ்மார்ட் போன் மூலம் இதை இயக்க வேண்டும்.மேசையில் தெரியும் திரையின் மூலமும் இதை இயக்கலாம். லேசர் கதிர்களால் இந்த சமையல் மேடை செயல்படும். அடுத்த பத்து வருடங்களில் இந்த முறையில் சமையல் வேலைகள் நடப்பதற்கான சாத்தியங்களும் உள்ளன.
மினி செட்டாப் பாக்ஸ்
ஜியோமி நிறுவனம் மினி செட்டாப் பாக்ஸ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சார்ஜரைவிடவும் மிகச் சிறிய அளவில் இருக்கும் செட்டாப் பாக்ஸ் மூலம் டிவி நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கலாம். திரைப்படங்கள், ஸ்போர்ட்ஸ் சேனலைப் பார்க்க முடியும்.
வயர்லெஸ் ஸ்பீக்கர்
ஸ்பீக்கர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான கிரியேட்டிவ் கையடக்கமான ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. வயர்லெஸ் முறையில் இந்த ஸ்பீக்கர் இயங்கும். முற்றிலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் இந்த ஸ்பீக்கர் தயாரிக்கப்பட் டுள்ளது.
Post a Comment Blogger Facebook