மென்லோ பார்க்: ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்து நீண்ட காலம் செயல்படாமல் இருக்கும் அக்கவுண்ட்களை முடக்க ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. வெகு வடிரைவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஃபேஸ்புக் நிர்வாகம் தனது அதிகாரபூர்வ வலைப்பக்கத்தில் அறிவித்துள்ளது. அந்த பணியை வரும் 12ம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

பயன்படாமல் இருக்கும் ஃபேஸ்புக் அக்கவுண்ட் மூலம், பேஸ்புக் பக்கங்களுக்கு ஏற்கனவே ‘லைக்’ கொடுத்திருந்தால், அந்த லைக்குகளும் ’அன்லைக்’ ஆகி விடும். இதனால், பல பேஸ்புக் பக்கங்கள் தனது ‘லைக்’களை இழக்க நேரிடும். இந்த நடவடிக்கை மூலம், நிறுவனங்கள், தங்கள் பேஸ்புக் பக்கத்திலிருந்து, செய்திகளை , தகவல்களை பகிரும் போது, சரியான நபர்களுக்கு கொண்டு சேர்க்க உதவும் என்று ஃபேஸ்புக் கூறுகிறது.

முடக்கப்பட்ட ஃபேஸ்புக் அக்கவுண்ட்கள் மீண்டும் செயல்பட விரும்பினால், அந்த அக்கவுண்ட் மூலம் கொடுக்கப்பட்ட லைக்குகள், கருத்துகள் அனைத்தும் மீட்கப்பட்டு அந்தந்த பக்கங்களில் சேர்க்கப்படும் என்றும் ஃபேஸ்புக் நிர்வாகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக்கின் இத்தகைய ’லைக்’ களை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கை மூலம் போலி லைக்குகளும், முடக்கப்படும். மேலும், இறந்தவர்களின் பேஸ்புக் அக்கவுண்ட்களும் மூடப்படும்.

Post a Comment Blogger

 
Top