இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘மாஸ்’. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் எமி ஜாக்சன் நடித்து வருகின்றனர். மேலும் வழக்கம் போல் காமெடி கதாபாத்திரத்தில் பிரேம்ஜி நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக 
இப்படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது இணையதளத்தில் வைரலாக பரவி வரும் இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த போஸ்டரில் சூர்யா இதுவரை இல்லாத விதமாக முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். எனவே இப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் தற்பொழுது எகிறிய வண்ணம் உள்ளன. நிச்சயம் இப்படம் சூர்யா ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை



Post a Comment Blogger

 
Top