இப்போது ஐபோன் 6-ஐ விடச் செய்திகளில் அதிகமாக அடிபடுவது நெக்சஸ் 6 அறிமுகமாக தயார் என்பதுதான். ஐபோன் 6 பிளஸ் போலவே இதுவும் பெரிய திரையுடன் வருகிறது. கூகுளின் நெக்சஸ் 5 வெளியாகி ஒரு வருடம் ஆகிறது. இதனிடையே அடுத்த நெக்சஸ் பற்றிப் பலவிதச் செய்திகள் வெளியாகி வருகின்றன. நெக்சஸ் 6 டேப்லெட் ரகத்தைச் சேர்ந்ததாக இருக்கும். 5.9 அங்குலம் திரையுடன் இது வருகிறது. ஐபோன் 6 5.5 அங்குல திரையுடையது, 



சாம்சங்கின் Galaxy Note 4 5.7 அங்குல திரையுடையது. எனவே சக போட்டியாளர்களில் பெரியத்திரை கொண்டதாக நெக்சஸ் 6 காணப்படும். ஆண்ட்ராய்டு எல் இயங்குதளத்துடன் வர இருப்பதாகவும், கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு எல் இயங்குதளம் என்பது ஆண்ட்ராய்டின் புதிய பதிப்பாகும்.நெக்சஸ் 6 டேப்லெட் பிரிவில் கூகுளின் முதல் நுழைவாகவும் கருதப்படுகிறது. கூகுலின் பழைய நெக்சஸ் 5 அதன் வழக்கமான தயாரிப்பு நிறுவனமான மோட்டோர்லோ அல்லாமல் LG யின் தயாரிப்பாக வந்தது. அதனால் அதன் அடுத்த தயாரிப்பான நெக்சஸ் 6 எந்த நிறுவனத்துடன் இணைந்து வெளிவரும் என்ற குழப்பம் இருந்தது. இப்பொழுது பழையபடி மோட்டோர்லோ தயாரிப்பகவே வருகிறது. 


இந்த கூகுல் நெக்சஸ் 6 2.5GHz quad-core Snapdragon 805 processor ஐ கொண்டுள்ளது. இதன் நினைவகமானது 16 மற்றும் 32 GB உள்ளக நினைவகத்தை கொண்டதாக இருக்கும். இதன் RAM 3 GB யாகும். இதன் திரை நாம் ஏற்கணவே பார்த்தது போல 5.9 அங்குலம் கொண்ட பெரிய திரையாக இருக்கும். இதே போல இதோடு வரும் Galaxy Note 4 ஆனது 5.7 அங்குலம் திறையுடனும். 2.3 GHz quad-core Qualcomm Snapdragon 800 பிராசசர் கொண்டதாக இருக்கிறது. இதுவும் 3 GB RAM உடையதே. கூகுல் ஐ ஃபோனோடு ஒப்பிடும்போது Galaxy Note 4 பெரிய திரை கொண்டதாக இருந்தாலும், அது மோட்டோவுடன் ஒப்பிடும் போது ஏறக்குறைய ஒரே அளவிலான திரை கொண்டதாகவே இருக்கிறது. கூகுலின் நெக்சஸ் 6 வரும் நவம்பரில் சர்வதேச அளவில் அறிமுகமாகலாம் என்றும் கூறப்படுகிறது. 


Post a Comment Blogger

 
Top