சாம்சங்கின் பாதுகாப்பான ட்ரக் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் காணொளி யூ டியூப்பில் வைரலாக மாறியுள்ளது.
நெரிசலான சாலைகளில் மெதுவாக ஊர்ந்து செல்லும் பெரிய ட்ரக்கை முந்தி செல்வது எப்போதுமே ஆபத்தானது. ஏனென்றால் காரில் இருந்துக்கொண்டு ட்ரக்கிற்கு முன்னாள் வரும் வாகனங்களை பார்க்க முடியாது. உலகில் முக்கால்வாசி விபத்துக்கள் முந்தி செல்ல முற்படும் போது தான் நடக்கின்றன. எனவே இதை தடுக்க வகை செய்யும் பாதுகாப்பான ட்ரக் என்ற தொழில்நுட்பத்தை சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பத்தில் ட்ரக்கின் முன்பகுதியில் கேமிரா பொருத்தப்படும், அதே போல் பின்பக்க கதவில் பெரிய திரை ஒன்று அமைக்கப்படும். கேமிரா மூலம் ட்ரக்கின் முன் வரும் வாகனங்களை பின்பக்க திரையில் பார்த்து அதற்கு தக்கப்படி முந்தி செல்லமுடியும். இரட்டை பாதைகளை அதிகம் கொண்டுள்ள அர்ஜென்னினாவில் இந்த தொழில்நுட்பம் பரிசோதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் போக்குவரத்து நெரிசலினால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருவர் உயிரிழக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment Blogger Facebook