ஆமை போல் செயல்படும் கம்ப்யூட்டரை, எப்போ ஒழிச்சிக் கட்டலாம்னு காத்திருப்பவர்களில் நீங்களும் ஒருவரா..?!
இனி பல்லை கடித்துக் கொண்டு பொறுமையாக காத்திருக்கவும் வேண்டாம், அதிக விலை கொடுத்து புது லாப் டாப்போ அல்லது கம்ப்யூட்டரோ வாங்க வேண்டாம். உங்கள் அதே கம்ப்யூட்டரை முயல் வேகத்தில் இயங்க வைக்க இதோ 10 சூப்பர் ஐடியாக்கள்..!
அன்இன்ஸ்டால் :
பயன்படுத்தாத ப்ரோகிராம்களை அன்இன்ஸ்டால் செய்திடுங்கள்.
டெலிட் :
அப் டூ டேட் இல்லாத டெம்ப்ரரி ஃபைல்களை எல்லாம் டெலிட் செய்துடுங்கள், அதில் இன்டர்நெட் ஹிஸ்டிரி மற்றும் கூக்கீஸ்களும் அடங்கும்.
சாலிட் ஸ்டேட் ட்ரைவ் :
விலை குறைவான ஹார்ட் ட்ரைவ்களை நீங்கள் பயன்படுத்தவில்லை எனில், சாலிட் ஸ்டேட் ட்ரைவை இன்ஸ்டால் செய்யுங்கள். இது உங்கள் ஹார்டு ட்ரைவ் செயல்பாட்டை வேகப்படுத்தும்.
ஹார்டு ட்ரைவ் ஸ்டோரேஜ் :
உங்கள் ஹார்டு ட்ரைவ் 85% நிரப்பப்பட்டு விட்டால், அது கண்டிப்பாக உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தை குறைக்கும். அதனால் ஹார்டு ட்ரைவ் ஸ்டோரேஜ் அதிகமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
தவிர்க்கவும் :
தேவையில்லாத ஸ்டார்ட் அப்ஸ்களை தவிர்க்கவும். முடிந்தால் அன்ட்டி வைரஸ் தவிர்த்து ஏனைய அனைத்தையும் கூட தவிர்க்கலாம், 200க்கும் மேற்பட்ட ஃபான்ட் ஸ்டைல்களிலும் தேவை இல்லாததை தவிர்க்கலாம்.
அதிக ரேம் :
நீங்கள் நிறைய ப்ரோகிராம்களை பயன்படுத்துபவர் எனில் அதிக ரேம் உங்களுக்கு கட்டாயம் தேவைதான்.
டிஸ்க் டிப்ரேக்மண்ட் :
டிஸ்க் டிப்ரேக்மண்ட் ரன் செய்யலாம். இது கேட்க கொஞ்சம் சிக்கலாக இருக்கலாம். ஆனால் இது உங்கள் ஹார்டு ட்ரைவ்களை மறுகட்டமைக்க உதவும். இதை நிகழ்த்த, ஹார்டு டிஸ்க்கை ரைட் கிளிக் செய்து > ப்ராபர்டீஎஸ் > டூல்ஸ் > டிப்ரேக்மண்ட் நௌவ், செலக்ட் செய்யவும்.
டிஸ்க் கிலீன் அப் :
டிஸ்க் கிலீன் அப்பை ரன் செய்வது மூலமாகவும் வேகத்தை அதிகரிக்க முடியும். இதை நிகழ்த்த ஸ்டார்ட் > ஆல் ப்ரோகிராம்ஸ் > அக்ஸ்சசரிஸ் > சிஸ்டம் டூல் > டிஸ்க் கிலீன் அப், செலக்ட் செய்யவும்.
ஐபி அட்ரஸ் :
எப்போதும் மாற்றப்படாத ஐபி அட்ரஸ் உங்கள் கம்ப்யூட்டரை வேகப்படுத்த உதவும் மற்றுமொரு யுக்தி ஆகும்.
தூசிகளை துடையுங்கள் :
இது ஒரு விஷயமா என்று தோன்றும், ஆனால் நம்புங்கள் உங்கள் கம்ப்யூட்டர்களில் படிந்திருக்கும் தூசி, கம்ப்யூட்டரின் வேகத்தை குறைக்க வல்லது..!
Post a Comment Blogger Facebook