NFk0T3K.jpg?1

ஸ்மார்ட் போன்கள் வழியாக மெசஞ்சர் ஆப் முலம் இலவசமாக வீடியோ அழைப்பு செய்யும் வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம்  செய்துள்ளது. ஆன்ட்ராய்ட் மற்றும் வின்டோஸ் செயலி தளத்தில் இது இயங்கும். இந்த மெசஞ்சர் ஆப் மூலம் வீடியோ மற்றும் ஆடியோ காலிங்  செய்வதற்கு எவ்வித கட்டணமும் விதிக்கப்படாது. இணையதளம் அல்லது வைபை வசதி மட்டும் போதுமானது. 

இந்த மெசஞ்சர் செயலியில், வீடியோ காலிங் எனும் பிரிவை ஆன் செய்து, அதில் ஸ்மார்ட் போனின் பின்பக்க, அல்லது முன்பக்க கேமிரா மூலம்  பேசுவோரை படம்பிடித்து, எதிர்முனையில் உள்ளோரிடமும் பேசும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி முதற்கட்டமாக ஐரோப்பிய  நாடுகளிலும், அமெரிக்கா, நைஜீரியா, ஏமன், ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Post a Comment Blogger

 
Top