மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 10 விரைவில் வெளியிடப்படும் நிலையில், அதுவே இறுதியான விண்டோஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து விண்டோஸ் 11 என எதுவும் வராது. ஒரு எண்ணுடன் தரப்படும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக, விண்டோஸ் 10 இருக்கும். விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கும், தேவைப்படும் போதெல்லாம் அதற்கான சப்போர்ட் பைல்கள் தரப்படும்.ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை அன்று சப்போர்ட் பைல்கள் வெளியிடப்பட்டு வந்த பழக்கமும் கைவிடப் படுகிறது.


ஆனால், தொடர்ந்து புதிய வசதிகள் அவ்வப்போது தரப்படும். புதிய வசதிகளை, அடுத்த விண்டோஸ் பதிப்பிற்கென தனியே ஒதுக்கி வைக்கும் பழக்கம் இனி இருக்காது என, மைக்ரோசாப்ட் நிறுவன பொறியாளர் பிரிவின் இயக்குநர் ஜெர்ரி நிக்ஸன், அண்மையில் சிகாகோ நகரில் நடந்த கருத்தரங்கில் தெரிவித்துள்ளார். இதுவரை அப்டேட் பைல்கள், பாதுகாப்பு குறித்தவையாகவே இருந்து வந்துள்ளன. இனி, புதிய வசதிகளும் அது போலவே அப்டேட் பைல்களாகத் தரப்படும். விண்டோஸ் 10, மைக்ரோசாப்ட் தரும் விண்டோஸ் ஓ.எஸ். எக்ஸ் (Windows OS X) இருக்கும். அதாவது, ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போல இதுவும் தொடரும்.

இது நல்லதொரு பழக்கம் தான். எங்கும் பிராட்பேண்ட் இணைய இணைப்பு கிடைக்கும் சூழ்நிலையில், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை சி.டி.யில் அதற்கான பதிவு எண்ணுடன் டப்பாவில் அடைத்து விற்பனை செய்திட வேண்டியதில்லை. இணையத்திலிருந்து அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான். வருங்காலத்தில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒரு சேவையாகத்தான் கருதப்படும். புதிய வசதிகள் மற்றும் தேவைப்படும் மாற்றங்கள், அவை தேவைப்படும்போதெல்லாம் வழங்கப்படும்.

ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போல, சிறிய அளவில், இலவச அப்டேட் வசதிகள் மட்டுமே விண்டோஸ் 10 சிஸ்டத்திற்குத் தரப்படும். விண்டோஸ் 10 சிஸ்டம் பைல்களும், விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டத்துடன் இணைக்கப்படும் சிறிய அளவிலான அப்டேட் பைல்களாகவே கிடைக்கும். விண்டோஸ் 10 வெளியிடப்பட்டு, ஓர் ஆண்டுக்குள், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்டிருப்பவர்கள் தங்கள் சிஸ்டத்தினை “அப்டேட்” செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் தனியே விலை கொடுத்துத்தான் அதற்கான உரிமம் பெற்றுக் கொள்ள முடியும். 

பெரிய அளவிலும் மாற்றங்கள் மற்றும் வசதிகள் தரப்பட வேண்டும் என மைக்ரோசாப்ட் விரும்பினால், அவையும் தரப்படும். ஆனால், அனைத்தும், டெஸ்க்டாப் மற்றும் மொபைல் சாதனங்களுக்குப் பொதுவானவையாகவே இருக்கும். ஆனால், சில விஷயங்கள் இன்னும் தெளிவாக்கப்படவில்லை. விண்டோஸ் 10 அப்டேட் செய்து கொண்டவர்கள், கம்ப்யூட்டரில் நுழைந்து பதிந்து கொண்ட வைரஸ் புரோகிராம்களை நீக்க, ரீ இன்ஸ்டால் செய்வது குறித்து எந்த குறிப்பும் இதுவரை தரப்படவில்லை. இப்போது விண்டோஸ் 7 அல்லது 8 சிஸ்டம் கொண்டு இயக்கி வருபவர்கள், மீண்டும் விண்டோஸ் சிஸ்டத்தினைத் தங்களிடம் உள்ள சிஸ்டம் சி.டி. அல்லது தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் மூலம் உருவாக்கப்பட்ட, ப்ளாஷ் ட்ரைவ் இன்ஸ்டலேஷன் செயலிகள் மூலம், ரீ இன்ஸ்டால் செய்து கொள்கின்றனர். இது விண்டோஸ் 10க்கு எப்படி இருக்கும் என இன்னும் அறியப்படவில்லை

Post a Comment Blogger

 
Top