ஸ்மார்ட்போனில் சார்ஜ் தீர்ந்து போவதும், அந்த நேரத்தில் சார்ஜர் தேடி அலைவதோ அல்லது சார்ஜரை பொருத்த மின்சாரவசதியை தேடி அலைவதோ பரவலாக எல்லோருக்கும் ஏற்படும் அனுபவம்தான். ஆனால் வருங்காலத்தில் இந்த பிரச்னை அநேகமாக இல்லாமல் போய்விடும் வாய்ப்பு இருக்கிறது.
எப்போது போனில் சார்ஜ் இல்லாமல்போனாலும் இருந்த இடத்திலேயே சார்ஜ் செய்து கொண்டு விடலாம். இதற்கு சார்ஜரே தேவை இருக்காது. அதெப்படி? என்று ஆர்வத்தோடு கேட்டீர்கள் என்றால், எல்லாம் வயர்லெஸ் செய்யும் மாயம் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆம், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களை வயர்லெஸ் மூலம் சார்ஜ் செய்து கொள்ளும் முறை தற்போது மெல்ல பிரபலமாகி கொண்டுவருகிறது. இதன் அடையாளமாக ஸ்பைனின் பார்சிலோனாவில் நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் எனும் கேட்ஜெட் கண்காட்சியில், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களை சார்ஜ் செய்ய வழி செய்யும் மேஜை, நாற்காலி மற்றும் மின்விளக்கு ஆகியவை அறிமுகம் ஆகியிருக்கிறது. பர்னிச்சர்கள் உலகில் புகழ்பெற்ற ஸ்வீடன் நிறுவனமான ஐகியா இந்த மேஜை, நாற்காலிகளை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த நவீன பர்னிச்சர்கள் ஒவ்வொன்றிலும் வயர்லெஸ் சார்ஜிங் பேட் இணைக்கப்பட்டிருக்கும். அவற்றின் மீது போனை வைத்தால் போதும் வயர்லெஸ் உயிர்பெற்று போன் சார்ஜ் பெறத்துவங்கிவிடும். தனியே கேபிள்களை பயன்படுத்தும் அவசியம் கிடையாது. மேஜை, நாற்காலி என்றால் அவற்றுடன் மின்சார் கேபி ளை இணைக்க வேண்டும். மின் விளக்கு என்றால் அந்த தேவையும் இல்லை. இவை தவிர தனியே சார்ஜிங் பேடையும் ஐகியா அறிமுகம் செய்திருக்கிறது. அவற்றை சுவற்றிலோ அல்லது வேறு எந்த பரப்பிலோ பொருத்தி , வயர்லெஸ் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
வாழ்க்கைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்றாலும் இதை சாத்தியமாக்கும் தொழில்நுட்பம் நூற்றாண்டு பழைமையானது என்பதுதான் சுவாரஸ் யமான விஷயம்.
Post a Comment Blogger Facebook