2016ஆம் ஆண்டுக்கான பல்வகைமை குடியேற்ற அமெரிக்கா வீசா விண்ணப்ப நிகழ்ச்சித்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகிறது.
இந்த நிகழ்ச்சித்திட்டம் 2014 நவம்பர் நவம்பர் 3ஆம் திகதியன்று நிறைவடையவுள்ளது.
குறித்த விண்ணப்ப நிகழ்ச்சி திட்டத்தின்போது காகித விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இணையம் மூலமான விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று அமெரிக்க ராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது
இறுதிவரை காத்திருக்காமல் முன்கூட்டியே இந்த விண்ணப்பங்களை அனுப்புமாறு ராஜாங்க திணைக்களம் கேட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்களை பங்களாதேஸ், பிரேசில், கனடா, சீனா, கொலம்பியா, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ளோர் அனுப்ப முடியாது.
கடந்த ஐந்து வருடங்களில் குறித்த நாடுகள் 50,000க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளமை காரணமாகவே இந்த தடவை குறித்த நாடுகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
2016 கிறீன்காட் வீசா விண்ணப்பங்கள் தொடர்பான தகவல்களை கீழ்வரும் இணையத்தள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம் என்று அமெரிக்க ராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.
ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தில் சட்டபூர்வமான நிரந்தர குடிமக்களாகக் கருதப்படுவதற்கான குடிவரவு வீசாக்களுக்கு அவர்கள் தகைமை பெறுவார்கள்.
இந்த நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக, சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் விபரமான ஆலோசனைகளையும், தகைமைகளையும் கண்டறிவதற்கு ஆர்வம் கொண்டுள்ளீர்களாயின் தயவு செய்து கொழும்பு அமெரிக்க தூதுவராலயத்தின்www.srilanka.usembassy.gov/visas/diversityvisa- lottery-program.html இணையத்தளத்தைப் பரிசீலிக்கவும்.
அதிர்ஷ்டக் குலுக்கலுக்கு விண்ணப்பிப்பதாயின் தயவுசெய்து www.dvlottery.state.gov இணையத்தளத்தைப் (2015 May மாதத்தில்) பார்வையிடவும்.
ஆலோசனைகள்:-
2014 ஒக்டோபர் 1ம் திகதி முதல் நவம்பர் 02ம் திகதி வரையிலான கால எல்லையில் அதிஷ்டக் குலுக்கலுக்கான விண்ணப்பப் படிவம் ஏற்றுக் கொள்ளப்படும்.
* இலங்கை, மாலைதீவு உட்பட ஒரு சில நாடுகளில் பிறந்தோருக்கு மாத்திரமே அதிஷ்டக் குலுக்கல் செல்லுபடியாகும்.
* ஒருமுறை மாத்திரமே நீங்கள் விண்ணப்பிக்க முடியும். பலமுறை விண்ணப்பித்தால் அதன் பெறுபேறாகத் தகைமையை இழக்க நேரிடும்.
* பல்வகைமை வீசாவிற்குத் தேவையான தகைமைகளான கல்வித் தகைமையையும், தொழில் அனுபவத் தகைமையையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
எனவே, விண்ணப்பிப்பதற்கு முன்னர் உங்களுக்குத் தேவையான தகைமைகளையிட்டு நிச்சயித்துக் கொள்ளுங்கள்.
* இணையத்தளத்தில் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர், அதற்கான உறுதிப்படுத்தப்பட்ட இலக்கம் வழங்கப்படும். நீங்கள் வீசா நேர்காணலுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா என இந்த இலக்கத்தைக் கொண்டே பரிசீலனை செய்து பார்க்க முடியும்.
எனவே, இவ்விலக்கத்தைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்
இணையத்தளத்திற்கான விண்ணப்பம் முற்றிலும் இலவசமானது. எதுவித மறைமுகமான செலவுகளும் கிடையாது.
ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டவர்கள் எனத் தம்மை அறிமுகப்படுத்தும் போலித் தனிநபர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ ஏமாற வேண்டாம்.
தெரிவு செய்யப்படுவது தொடர்பில் முன்வைக்கப்படும் போலி உறுதிமொழிகளை நம்ப வேண்டாம்.
விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்வதற்கும் சமர்ப்பிப்பதற்கும் 3ம் தரப்பினருடைய உதவி தேவையில்லை.
அடுத்த நடவடிக்கை தொடர்பான அறிவித்தல்கள்!
நீங்கள் தெரிவு செய்யப்பட்டு இருப்பின் ஐக்கிய அமெரிக்கப் பேராளர் அதிகாரியோடு (U.S.Consular Officer) ஒரு நேர்காணல் இடம்பெறும்.
நீங்கள் வீசாவைப் பெறத் தகுதி பெற்றுள்ளீர்களா என அவரே தீர்மானிப்பார்.
Post a Comment Blogger Facebook