இணையதளங்கள் அனைத்துமே எழுத்து மற்றும் படங்களினால் ஆனது. ஒரு கருத்தினை எளிமையாக புரிந்துகொள்ள புகைப்படம் பயன்படுகிறது.இணையதளங்களில் உள்ள எழுத்துக்கள் அனைத்தையுமே படிக்க முடியாது. ஒரு சில குறிப்பிட்ட எழுத்துகளை மட்டுமே படிக்க முடியும். இதற்கு பதிலாக அந்த இணையதள எழுத்துக்களை பிரின்ட் எடுக்க முடியும்.இது போன்று இப்போது எழுத்துக்களை ஒலியாகவும் மாற்றிக்கொள்ள முடியும். அதற்காக நெருப்புநரி உலவியில் நீட்சி ஒன்று உள்ளது.
இந்த நீட்சியினை தரவிறக்கி நெருப்புநரி உலவியினை மறுதொடக்கம் செய்து கொள்ளவும்.நெருப்புநரி உலவியின் அடிப்பகுதியில் எழுத்திலிருந்து ஒலியாக மாற்றுவதற்கான ஆப்ஷன் இருக்கும். எந்த எழுத்துக்களையெல்லாம் ஒலியாக மாற்ற வேண்டுமோ அதனை தேர்வு செய்து இந்த பட்டனை அழுத்தினால் போதும். எழுத்தானது ஒலியாக மாற்றம் செய்யப்பட்டு டவுண்லோட் செய்வதற்கான ஆப்ஷன் கிடைக்கும். அதனை பயன்படுத்தி நீங்கள் டவுண்லோட் செய்துகொள்ள முடியும்.
இவ்வாறு பதிவிறக்கும் ஒலியானது .mp3 பார்மெட்டில் இருக்கும்.அதனால் செல்போனில் பதிவேற்றம் செய்தும் கேட்டுக்கொள்ள முடியும். எப்போதும் இணையத்தில் பரபரப்பாக செயலாற்றுபவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிகப்பெரிய பகுதியாக உள்ள எழுத்து தொடர்களை இவ்வாறு மாற்றம் செய்து கேட்டுக்கொள்ள முடியும். இதனால் நேரம் மிச்சம் ஆகும். முக்கியமாக கண்பார்வையற்றவர்ளிடம் இணையத்தில் உள்ள செய்தியினை இந்த வசதியின் மூலம் கொண்டு சேர்க்க முடியும்.
முக்கியமான குறிப்பு ஆங்கில எழுத்துக்களை மட்டுமே ஒலியாக மாற்றம் செய்து கொள்ள முடியும்.
Post a Comment Blogger Facebook